×

ஒரு பாடலில் ஓவியா

மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம், அலாவுதீனின் அற்புத கேமரா. அவரது ஜோடியாக ஆனந்தி, வில்லனாக 96 பட தயாரிப்பாளர் நந்தகோபால் நடிக்கின்றனர். படத்தின் டைட்டிலில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், சென்ராயன், ஓவியா, பாடல் ஆசிரியர் யுகபாரதி நடித்து இருக்கின்றனர்.

தியாகராஜ பாகவதர் ஸ்டைலில் இசை அமைப்பாளர் பாலபாரதி பாடியுள்ளார். சிலுக்குவார்பட்டி சிங்கம், ராஜபீமா ஆகிய படங்களுக்கு பிறகு ஓவியா ஒரு பாடலுக்கு ஆடிய படம் இது.

Tags : Oviya ,
× RELATED கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: பளுதூக்குதலில் தமிழ்நாடுக்கு தங்கம்